ஆதிதமிழர் பேரவை தலைவர் அதியமானை விமர்சித்து பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜின்சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் மனு அளித்தனர்.
திருப்பூர்: ஆதிதமிழர் பேரவை தலைவர் அதியமானை விமர்சித்து பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜின்சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் மனு அளித்தனர்.

கடந்த மாதம் 31-ம் தேதி பழனி அடுத்த ஆயக்குடியில் நடைபெற்றக் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமானை தவறாகவும், ஒருமையிலும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜின்சம்பத் விமர்சித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு, கடும் கண்டனம் தெரிவித்த ஆதிதமிழர் பேரவையினர், அர்ஜின்சம்பத் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தொடர்ந்து, வெளியே வந்த ஆதித்தமிழர் பேரவையினர் அர்ஜின்சம்பத்தை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.