பசுந்தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிக்க கோரி நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி: பசுந்தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிக்க கோரி நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் 15 அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இதில் கடந்த 4 மாதங்களாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.37 கோடி நிலுவை தொகையை வழங்கக் கோரியும், பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அருகேயுள்ள இத்தலார் கிராமத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். என்.ஆர்.சுரேஷ், ஐ.ஆர்.மூர்த்தி, பேலிதளா கிராம தலைவர் அர்ஜூணன், இத்தலார் ஊர்த் தலைவர் கே.ஜே.ராமன், போர்த்தி தலைவர் குண்ணன், பெம்பட்டி தலைவர் லட்சுமணன், புதுஹட்டி தலைவர் சந்திரன் ஆகியோரது முன்னிலையில் ஐந்து கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு ஆதரவாக இத்தலார் கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.