கோவை லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
கோவை: கோவை லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
கோவை கணபதியில் உள்ள லட்சுமி மெஷின் ஓர்க்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தளத்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தில் உள்ளே காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் இருந்ததால் கரும்புகையோடு மளமளவெனத் தீ பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் உள்ளே இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. தீப்பிடித்த அறையில் ஊழியர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.