பாரதியார் பல்கலை விவகாரம்: மேலும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

லஞ்ச வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை: லஞ்ச வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையில் உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நேற்று காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை சுமார் 13 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர் துணை வேந்தர் கணபதியின் உறவினர் என்று தெரிகிறது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளில் மதிவானணுக்கும் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...