திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை அருகே சிலிண்டர் வெடித்ததில் எட்டு குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

ஊத்துக்குளி சாலையிலுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் ராமசாமி என்பவர்களுக்கு சொந்தமான எட்டு குடிசை வீடுகள் உள்ளன. இன்று மாலை வீட்டிலுள்ள அனைவரும் வேலைக்கு சென்றிருந்த வேளையில், வீட்டிலிருந்த குழந்தைகள் கியாஸ் அடுப்பைப் பற்ற வைத்து விட்டு வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் காரணமாக அடுத்தடுத்த வீடுகளில் தீப்பிடித்து அங்கிருந்த சிலிண்டர்களும் வெடித்துள்ளன. இதனால், எட்டு குடிசை வீடுகளும் முற்றிலும் தீக்கிரையானது.
இதனையடுத்து, தகவலறிந்து மூன்று வண்டிகளில் வந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தின் காரணமாக 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து தீக்கிரையானது. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
