சர்வதேச சதுப்பு நில தினத்தையொட்டி, முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி : சர்வதேச சதுப்பு நில தினத்தையொட்டி, முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையால் இன்று சர்வதேச சதுப்புநில தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் இன்று கூடலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வனப்பகுதிகள், வனவிலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றிய கருத்தரங்கு மற்றும் காணொளி காட்சிகள் மூலமாக விளக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாயார் வனப்பகுதிக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, சதுப்பு நிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது.