ஓடும் ரயிலில் தமிழ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

ஓடும் ரயிலில் தமிழ் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண்டோ போஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓடும் ரயிலில் தமிழ் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண்டோ போஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நடிகை சனுஷா கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும், ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இவர் விரைவு ரயிலில் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தபோது ஆண்டோ போஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதைதொடர்ந்து, சனுஷா டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர், போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை அதிரடியாக கைது செய்தனர். அந்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

ஆபாசமாகப் பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மேலும் ஒரு நடிகைக்கு ஓடும் ரயில் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...