திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் முட்புதரில் பற்றி எரிந்த தீயினை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் முட்புதரில் பற்றி எரிந்த தீயினை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

திருப்பூரை அடுத்த நல்லூர் அருகே உள்ளது காசிபாளையம். இங்கு, தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள முட்புதரில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. திறந்தவெளி பகுதி என்பதால், தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளித்தது. பின்னர், இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தினால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.