உலக சதுப்பு தினத்தை முன்னிட்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவை ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
கோவை: உலக சதுப்பு தினத்தை முன்னிட்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவை ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

உலக சதுப்பு தினத்தை முன்னிட்டு சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்களின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவையில் நடைபெற்றது. சிங்காநல்லூர் குளக்கரை அருகே நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சதீஷ் மரக்கன்றுகளை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதன் ஒருபகுதியாக சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவை நவக்கரை அடுத்துள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு துவங்கிய இப்பேரணியை இந்திய தொழில் வர்த்தகசபை தலைவர் வனிதா மோகன் துவக்கி வைத்தார். பேரணியில், சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாக சென்ற பேரணி வ.ஊ.சி. மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்தப் பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.