கோவை மாநகராட்சியின் சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடைய குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
கோவை : கோவை மாநகராட்சியின் சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடைய குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் முன்னணி நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
மிகப் பெரிய டெக்ஸ்டைல் நிறுவனங்கள் மற்றும் தொழில்மையங்களைக் கொண்ட தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் கோவை மாவட்டமும் ஒன்றாகும். இங்கு, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 1.6 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட கோவை மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் என்பது மிகக் கடினமாக ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் மிகவும் பிரபலமான நிறுவனமான சுயிட்ஸ் நிறுவனம் கோவை மாநகராட்சிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. 26 ஆண்டுகளுடைய இந்தத் திட்டத்திற்கு சுமார் 400 மில்லியன் யூரோ மதிப்புடையதாகும். இந்தத் திட்டத்தின் மூலம் 24*7 என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும், 1,200 கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 1,50,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தைப் பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்ட நிலையில், சுயிட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியின் மால்வியா நகர் மாவட்டத்திற்கு முதல்முறையாக குடிநீர் விநியோகத் திட்டத்தை சுயிட்ஸ் நிறுவனம் பெற்றது. இதைத்தொடர்ந்து, மெட்ரோநகரங்களான பெங்களூரூ, கொல்கத்தா போன்ற பகுதிகளிலும் இந்த நிறுவனம் தங்களது பணியை மேற்கொண்டுள்ளது.