வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏதுமில்லை

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார்.

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்தார். 

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமானக் கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. கருப்புப் பண தடுப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வரி வசூல் உயர்ந்துள்ளது. ஜனவரி 15, 2018 வரையிலான காலத்தில் நேரடி வரி வளர்ச்சி விகிதம் 18.7%ஆக உள்ளது.

தனிநபர் வருமானவரி வருவாய் 12.6% அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப எம்.பி.க்களின் ஊதியம் மாற்றியமைக்கப்படும். ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும். 

வேளாண் உற்பத்தி நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக தொடரும். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கு வரி வசூல் ஆகவில்லை என்பதால் உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் நிரந்தர கழிவு வசதி மீண்டும் கொண்டுவரப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த மாற்றமும் செய்யப்படாதது, வரி செலுத்துவோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...