புதிய 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு புதிய ஊக்கத்தொகை அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
கோவை: புதிய 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு புதிய ஊக்கத்தொகை அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு தனது கடைசி முழுமையான பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்புகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உற்பத்தித் துறைக்கு புதிய ஊக்கத்தொகை அளிக்காதது ஏமாற்றமளிப்பதாகத் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அச்சங்கத்தின் தலைவர் கே.கே.ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய பட்ஜெட்டில் வேளாண் வருவாயினை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கைகள் தரமான வேளாண் பம்ப்செட் சந்தையினை மேம்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குள் வரும் 99 நகரங்களை மேம்படுத்த ரூ.2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குள் வரும் நகரங்களுள் ஒன்றான கோவைக்கு மிகுந்த பயனளிக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.