வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா உற்சாகக் கொண்டாட்டம்

வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவை : வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் துவக்க நாளான கடந்த 27-ம் தேதியன்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மாலை 07.00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 29-ம் தேதி காலை 06.00 சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பிரதோஷ வழிபாட்டைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு வால்பாறை வாழும் கலை குடும்பம் குழுவினரின் தெய்வீக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று சிறப்பு அபிஷேகமும், ஆராதனையைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று நல்லகாத்து ஆற்றிலிருந்து புறப்பட்ட வால்பாறை முருகன் பக்தர்களின் அங்க அலகு பறவைக்காவடி மாபெரும் ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயத்தை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பறவை காவடி பக்தர்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து, பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகளுடன் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், வால்பாறையின் பல்வேறு எஸ்டேட் பகுதிகள் மற்றும் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் தைப்பூச விழாக்குழுவினர் மற்றும் கோயில் கமிட்டிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...