வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை : வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 13-ம் ஆண்டு தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் துவக்க நாளான கடந்த 27-ம் தேதியன்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மாலை 07.00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. 29-ம் தேதி காலை 06.00 சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பிரதோஷ வழிபாட்டைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு வால்பாறை வாழும் கலை குடும்பம் குழுவினரின் தெய்வீக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று சிறப்பு அபிஷேகமும், ஆராதனையைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனர்.
அதைத்தொடர்ந்து இன்று நல்லகாத்து ஆற்றிலிருந்து புறப்பட்ட வால்பாறை முருகன் பக்தர்களின் அங்க அலகு பறவைக்காவடி மாபெரும் ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி ஆலயத்தை அடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பறவை காவடி பக்தர்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகளுடன் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், வால்பாறையின் பல்வேறு எஸ்டேட் பகுதிகள் மற்றும் வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பூச திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் தைப்பூச விழாக்குழுவினர் மற்றும் கோயில் கமிட்டிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.