கோவை : சிறுமுகை வனப்பகுதி அருகே மான் கறி வைத்திருந்த 36 வயது மதிக்கத்தக்க நபரை வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அந்த வனப்பகுதியில் சுற்றித்திரிந்த பி.கருப்பன் என்பவரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒரு பையில் சுமார் 10 கிலோ அளவிலான மான் கறி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வனத்துறை அதிகாரி என். சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.