ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ. 10 கோடி மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டம்

கோவையில் மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ. 10 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அதன் உரிமையாளர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கோவையில் மாத ஏலச்சீட்டு நடத்தி ரூ. 10 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அதன் உரிமையாளர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள போடிபாளையத்தில் வேலுசாமி துளசியம்மாள் சிட் பண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கடந்த பத்து வருடங்களாக வேலுச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மாத ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். மாதம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் தராமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

பணத்தை கட்டியவர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை உரிமையாளர் வேலுச்சாமியிடம் கேட்க,  பணம் தராமல் இழுத்தடித்த நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மதுக்கரை போலீஸில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்துள்ளனர். அதன்பெயரில், ஜனவரி மாதம் 30-ம் தேதிக்குள் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு முழு பணத்தை தருவதாக வேலுச்சாமி பத்திரத்தில் எழுதி தந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக சென்றுள்ளனர். 

இந்நிலையில், இன்று போடிபாளையத்தில் உள்ள வேலுச்சாமியின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைப் பெற சென்ற போது, வேலுசாமியைத் தவிர  அவரது மகள் சித்ரா மற்றும் பேரன் கோகுல் ஆகிய இருவரும் தலைமறைவாகியிருந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த முதலீட்டாளர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், நம்பிக்கையின் பெயரிலேயே இவர்களிடம் ஏலச்சீட்டுக்கு பணத்தை கட்டினோம். 3 ஆண்டுகள் சரியாக மாத சீட்டிற்கான பணத்தை வழங்கி வந்தவர்கள், கடந்த 8 மாதங்களாக பணத்தை தராமல் இழுத்தடிக்கின்றனர். தங்களைப் போல மாத ஏலச்சீட்டில் 500-க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தி உள்ளனர். 10 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

பணத்தை திருப்பி கேட்டால், தான் ஆளும்கட்சி அமைச்சரின் உறவினர் என வேலுச்சாமி மிரட்டுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், 

தாங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெறும் வரை அங்கிருந்து கலைந்து செல்லப் போவதில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...