ஆழ்குழாய் கிணறு அமைக்க ஏற்பாடு செய்ய விவசாயிகள் வேண்டுகோள்

திருப்பூர் மாவட்டத்தில் அரசு சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் அரசு சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூரில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில்  நடந்தது. இதில், பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், அவிநாசி, உடுமலை, காங்கேயம் போன்ற பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும், மழை இல்லாத காரணத்தினால், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டுமானால் தனியாரிடம், அதிக செலவு செய்து போர்வெல் போட வேண்டியுள்ளது. 

இதனால், அரசு வேளாண்மை பொறியியல் துறை மூலமாக சுமார் 1200 அடி ஆழம் போடும் புதிய ரிக் மிஷின் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

மேலும்  இந்த வறட்சியான காலத்தில் தண்ணீர் உள்ள இடங்களை பார்த்து ஆழ்குழாய் கிணறு அமைக்க போதிய நீருற்று நிபுணர்கள் இங்கு இல்லை. இதனால், தனியார் நிபுணரை வைத்து அதிக பணம் செலவு செய்து பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, போதிய நீருற்று நிபுணர்களை புதியதாக நியமித்து குறைந்த செலவில், நீர்மட்டம் பார்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

"திருப்பூர், இடுவாய், சின்னாண்டிபாளையம் வழியாக மழை காலங்களில் வரும் தண்ணீர் இந்த ஓடையின் வழியாக வந்து நொய்யலில் கலக்கிறது. சின்னாண்டிபாளையம் பகுதியில், இந்த ஓடையின் குறுக்கே மழைநீர் சேகரிக்கும் விதத்தில் இரண்டு தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதனால், இப்பகுதி விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இது சம்பந்தமாக திருப்பூர் வேளாண்மை பொறியியல் துறைக்கு இரண்டு ஆண்டுகளாக மனுகொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தடுப்பணை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விவசாயி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...