கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் சார்பில் அகில இந்திய ஒருங்கிணைந்த நுண்ணூட்டச் சத்துக்கள் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பழங்குடி விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மண்வளம் மற்றும் பயிர் மகசூல் மேம்பாட்டில் நுண்ணூட்டச் சத்துக்களின் பங்கு குறித்து வயல் விழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவை : கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையின் சார்பில் அகில இந்திய ஒருங்கிணைந்த நுண்ணூட்டச் சத்துக்கள் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பழங்குடி விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மண்வளம் மற்றும் பயிர் மகசூல் மேம்பாட்டில் நுண்ணூட்டச் சத்துக்களின் பங்கு குறித்து வயல் விழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

பழங்குடி விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு கோவை மாவட்டம், பெரியநாயக்கண்பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த பனப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 58 பழங்குடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மண்ணியல்துறை பேராசிரியர் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் திட்டப் பொறுப்பாளர் தி. சித்தேஸ்வரி அவர்கள் தனது வரவேற்புரையாற்றினார்.
மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் கோ. அருள்மொழிச்செல்வன், மலைப்பிரதேச நிலங்களில் மண் அரிமானம் தடுத்து மண் வளம் காப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

மண்ணியல்துறை உதவிப் பேராசிரியர் ப. மாலதி, மண் பரிசோதனையின் அவசியம் மற்றும் மண் மாதிரி எடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.
மண்ணியல்துறை உதவிப் பேராசிரியர் தீ. ஜெகதீஸ்வரி, சிறுதானியங்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துக்கூறினார்.

இதனைத்தொடர்ந்து, இயற்கை வள மேலாண்மை இயக்குநரக தனி அலுவலர் து.ஜவகர், பழங்குடி விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கி தலைமையுரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறைகள் அதிகரித்து வருவதற்கான காரணங்களை விளக்கியதுடன், பழங்குடி விவசாயிகள் மண்பரிசோதனை செய்து அதனடிப்படையில் உரமிட வேண்டும். விவசாயத்தில் நவீனதொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். மேலும், சிறுதானியங்களான கேழ்வரகு, கொள்ளு போன்ற இந்தப்பகுதியில் அதிகம் விளையக்கூடிய பொருளில் சங்கம் அமைத்து இலாபம் ஈட்ட வேண்டும் என்றார்.

இறுதியாக மண்ணியல்துறை உதவிப் பேராசிரியை தீ. ஜெகதீஸ்வரி நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான நிதி உதவியை இந்திய மண்ணியல் ஆராய்ச்சி நிறுவனம் போபாலிலுள்ள அகில இந்திய ஒருங்கிணைந்த நுண்ணூட்டச்சத்துக்கள் திட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.