திருமண தகவல் மையம் மூலமாக 8 பெண்களை ஏமாற்றிய நபர் கைது

கோவையில் திருமண தகவல் மையம் மூலமாக 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : கோவையில் திருமண தகவல் மையம் மூலமாக 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பி.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமுதவள்ளி. திருமணமாகி கணவனை இழந்த இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மையம் மூலமாக வரன் தேடி வந்தார். 

இந்த நிலையில், வெள்ளலூர் பகுதியை சேர்ந்த புருசோத்தமன் (45) என்பவர் அறிமுகமானார்.  இவருக்கும் குமுதவள்ளிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், புருசோத்தமன் ஏற்கனவே பல பெண்களுடன் திருமணமானவர் என்று குமுதவள்ளிக்கு தெரியவந்தது. 

இதை தொடர்ந்து, அவர் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமண தகவல் மையம் நடத்தி வந்த மோகன் மற்றும் வனஜா குமாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையறிந்த புருசோத்தமன் தலைமறைவாகினார்.

இது குறித்த பெண் காவலர் ஒருவர் கூறுகையில், "புருசோத்தமனுக்கு ஏற்கனவே திருமணமாகி கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள் இருக்கிறார். ஆனால், தனக்கு திருமணமானதை மறைத்து குமுதவள்ளியை அவர் திருமணம் செய்துள்ளார். இதற்கு சம்மந்தப்பட்ட இணையதள திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகன் மற்றும் வனஜா குமாரி என்பவர்களும் உடந்தை என தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. 

போலீசார் விசாரணை நடத்துகின்றனர் என்பதையறிந்த அவர்  தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...