9-வது சர்வதேச கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக (பில்ட் இன்டெக்) கண்காட்சி வரும் பிப்ரவரி 2-ம் தேதியன்று துவங்கி 5-ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கோவை: 9-வது சர்வதேச கட்டிடம் மற்றும் கட்டுமான வர்த்தக (பில்ட் இன்டெக்) கண்காட்சி வரும் பிப்ரவரி 2-ம் தேதியன்று துவங்கி 5-ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு ஹூசூர் சாலையில் உள்ள ஆர்தரா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், கொடிசியா சங்கத் தலைவர் சுந்தரம், பில்ட் இன்டெக் சேர்மன் கார்த்திகேயன், கொடிசியா கெளரவ செயலாளர் குமார் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, கொடிசியா சங்க தலைவர் சுந்தரம் கூறுகையில், "இந்தக் கண்காட்சியை காலை 10 மணி முதல் 2 மணி வரை வணிக பார்வையாளர்களும், மதியம் 2 மணி முதல் 6 மணி வரை ரூ.50 கட்டணம் செலுத்தி பொது மக்களும் பார்வையிடலாம்.
இதில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், புது தில்லி, ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த ஆண்டு 220 அரங்குகள் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு 300 அரங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.
பில்ட் இன்டெக் சேர்மன் கார்த்திகேயன் பேசுகையில், "கொடிசியா அரங்கில் ஏ, பி, சி அரங்குகளில் கட்டிட பொருட்களின் கண்காட்சியும், ஈ அரங்கு முழுக்க பர்னிச்சர் கண்காட்சியும் இடம் பெறும். இந்த கண்காட்சி 1,60,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு 50 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் சமீபத்திய தொழில்நுட்ப கட்டுமான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் இடம் பெற உள்ளது. கட்டிட பொருட்கள், சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர்கள், எல்.இ.டி லைட்டிங், நீச்சல் குள தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் இடம் பெறும்" என தெரிவித்தார்.