பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள தொட்டபெட்டா சாலையினை சீரமைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நீலகிரி:

நீலகிரி அதிகப்படியான சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய மலை மாவட்டமாகும். தோட்டக்கலை மற்றும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தோட்டங்கள், பூங்காக்கள், காட்சி முனைகளைக் காண ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை கவரும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தொட்டபெட்டா மலைச் சிகரம் உதகையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. உதகையிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தொட்டபெட்டா சிகரத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், தொட்டபெட்டா பிரிவு பகுதியிலிருந்து மலை உச்சிக்குச் செல்லும் 3 கிலோ மீட்டர் சாலை மோசமான நிலையில் உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சாலையை சீரமைக்க பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கையின் காரணமாகக் கடந்தாண்டு 3 மாத காலம் தொட்டபெட்டா செல்லும் சாலை தற்காலிகமாக மூடப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சாலை செப்பனிட்ட ஒரு வருடத்திற்குள் மீண்டும் சாலை பழுதடைந்து பழைய நிலையில் உள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், இந்த சாலை சீரமைப்பதற்காகச் சோதனை சாவடியில் இரு சக்கர வாகனத்திற்கு ரூ. 10, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.30, மற்றும் பெரிய வாகனங்களுக்கு ரூ.50 என வசூலிக்கப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்ட போதிலும் போதிய பராமரிப்பின்றி சாலை இருப்பது சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி உள்ளூர் மக்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலாவின் மூலம் பெரிய அளவிலான வருவாயை ஈட்டித்தரக்கூடிய தொட்டபெட்டாவிற்கு செல்லும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.