தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, ஜனவரி 29
தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது தாய்மாமன் நடராஜன் வீட்டில் வசித்து வந்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல் வெட்டியாக சுற்றித் திரிந்த சிவகுமார் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
இவரது தாய்மாமனான நடராஜன், கூலி வேலைக்குச் செல்பவர். அவ்வப்போது சிவக்குமாருக்கு செலவு செய்ய பணம் கொடுத்து வந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு மது அருந்த பணம் தராததால் தாய்மாமனான நடராஜனை அம்மிக் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயா, சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.