கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்கக்கோரி, அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கோவை, ஜனவரி 29

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே வாகராயம் பாளையம் பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இந்த மதுபானக்கடையினை அகற்றக் கோரியும், அப்பகுதியில் சாலையோர உணவு விடுதிகள், பள்ளி, குடியிருப்புகள் பகுதிகளில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையைத் தடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி பெண்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
அம்மனுவில், சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதால் சிறு வயது மாணவர்களும் கூட அதிகளவில் குடிப் பழக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் இதுகுறித்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும்பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.