கோவை மாவட்ட சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
கோவை, ஜனவரி 29
கோவை மாவட்ட சுற்றுலா மற்றும் வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய, மாநில அரசுகளால் சுமத்தப்படும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற சட்டங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாரிகளும் தங்கள் மீது உள்நோக்கத்துடன் இடையூறு செய்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை காரணமாக தொழில் செய்ய முடியாமல் குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை, வாரத்திற்கு 48 மணி நேரம் பணி என்ற சட்டத்திருத்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். வாகன சோதனையின் போது அசல் ஓட்டுநர் உரிமத்தைப் பறித்து வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதலமைச்சர், அரசு போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையருக்கு அனுப்ப உள்ளதாகவும் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.