தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் - கைது

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை, ஜனவரி 29

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.



தமிழக அரசு கடந்த 20-ம் தேதியன்று பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதனைத்தொடர்ந்து, பேருந்துக் கட்டண உயர்வு 100 சதவிகிதம் உயர்த்தியிருப்பதாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், எதிர்ப்பும் கிளம்பியது. தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தொடர் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.

தொடர்ந்து மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டமும், எதிர்கட்சிகளின் நிர்பந்தத்தினாலும் கட்டணத்தை சிறிது குறைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இருப்பினும் ஒரு சில பைசா மட்டுமே குறைக்கப்பட்டது. 

என்றாலும் ஏழை- எளிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு முடிந்த அளவிற்கு கட்டணத்தை குறைத்து இருப்பதாக முதலமைச்சர் கூறினார். இந்த கட்டணக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசின் இந்த பேருந்து கட்டணக் குறைப்பை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன. இந்த கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.



கோவை மாவட்டத்தில் வைசியால் வீதி, ஆர்.எஸ்.புரம், உக்கடம், காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல், பேருந்து நிலையம், சுந்தராபுரம், நஞ்சுண்டாபுரம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், சிட்ரா, கணபதி, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் காவல்நிலையம் எதிரில் என 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. 



இந்தப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருந்த நிலையில் 2 அயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி:-

இதேப் போன்று பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் 44 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 1500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



மேலும், இதேக் கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தேமுதிக-வினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...