உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் ஆண் சடலம் மீட்பு

உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 28

உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று காலை (ஜன. 28) உப்பிலிப்பாளையம் மேம்பாலத்திற்குக் கீழ் பகுதியில் முதியவரின் சடலம் ஒன்று இருப்பதாக ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை உறுப்பினர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகிகள் உயிரிழந்தவரின் யார் என்றும், அவர் எப்படி அங்கு வந்தார் என்றும் தகவல் திரட்டும் முயற்சியை மேற்கொண்டு அவரது பெயர் சுப்பிரமணி என்றும் அவர் பொள்ளாச்சியை சேர்ந்தவர் என்றும் கண்டறிந்தது.

இதனைத்தொடர்ந்து, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் அவரது மகன் சக்திவேல் என்பவருக்குத் தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டார். 

அதன் பிறகு காட்டூர் காவல் துறையினர் விசாரணைக்குப் பிறகு பிரேதத்தை சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...