நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள மாவட்டம் என்பதால், சாலைகளில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் தனியார் கல்லூரி மாணவர்கள் இன்று ஈடுபட்டனர்.
நீலகிரி, ஜனவரி 27

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவட்டமாகும். இங்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்ளர்கள், தட்டுகள் என சாலையோரங்களிலும், வனப்பகுதிகளிலும் வீசி விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று தனியார் கட்டிடக்கலை கல்லூரி மாணவர்கள் தொட்டபெட்டா பகுதியில் இருந்து கோத்தகிரி வரை செல்லும் சாலையோரங்களில் உள்ள குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து, மாணவர்களுடன் சேர்ந்து குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினார். மேலும், 2 கிலோ மீட்டருக்கு 17 மாணவர்கள் கொண்ட குழுவினர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.