தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மத்வராயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சிகளில் முழு சுகாதாரம் பேணிக்காக்க மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் அறிவுரை வழங்கினார்.
கோவை, ஜனவரி 26

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மத்வராயபுரம் ஊராட்சி, சாடிவயல் உண்டு உறைவிடப்பள்ளியில் இன்று (ஜன.26) குடியரசுதின விழாவினையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு 6 பயனாளிகளுக்கு தலா ரூ.12,500 வீதம் ரூ.75,000 மானியமாக வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில், கிராமசபைக் கூட்டத்தின் நோக்கம் பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் அனைத்து வளர்ச்சி பணிகளை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே ஆகும். மேலும், தங்கள் தேவைகளை தாங்களே விவாதித்தும் தீர்மானங்களின் அடிப்படையில் நிறைவேற்றிக்கொள்ளும் களமாகவும், கிராமசபைக் கூட்டங்கள் விளங்குகின்றது.
மத்வராயபுரம் ஊராட்சியில் சாலைகள், பாலம், மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிறை கட்டப்பட்டு முழுசுகாதாரம் பெற்ற ஊராட்சியாக விளங்குகின்றது. ஒவ்வொருவரும் முறையாக கழிப்பறையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிதண்ணீர் வைக்கும் பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்து பாதுகாப்பான முறையில் மூடிவைக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க மக்காத குப்பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது" என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பத்மாவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்லதம்பி, வட்டாட்சியர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.வே.சீனிவாசன், கோ.பார்த்திபன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.