கோவையில் கிராம சபைக் கூட்டத்திற்கு வர அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்ததால், பொதுமக்கள் ஐந்து கல் ஆட்டம் ஆடி பொழுதைக் கழித்தனர்.
கோவை, ஜனவரி 26
கோவையில் கிராம சபைக் கூட்டத்திற்கு வர அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்ததால், பொதுமக்கள் ஐந்து கல் ஆட்டம் ஆடி பொழுதைக் கழித்தனர்.

பெரிய நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அசோகபுரம் ஊராட்சி. இங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, காலை 11 மணி முதல் அக்கிராமத்தில் உள்ள சாக்கடை, குப்பை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் குறித்து மனு அளிக்கக் கிராம மக்கள் கூடியிருந்தனர்.

ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பல மணி நேரமாகியும் கூட்டத்திற்கு வராததால், அதிகாரிகளுக்காகக் காத்திருந்த கிராம மக்கள் சிலர் பொழுதைப் போக்க ஐந்து கல் ஆட்டம் ஆடினர். தொடர்ந்து, அதிகாரிகள் வர தாமதம் ஏற்பட்டதால் கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து சென்றனர். அதிகாரிகளின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.