குடியரசு தினத்தையொட்டி தில்லியில் தேசியக் கொடியேற்றினார் ராம்நாத்கோவிந்த்: கண்களைக் கவர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி, தலைநகர் தில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக தேசிய கொடியேற்றினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜனவரி 26

குடியரசு தினத்தையொட்டி, தலைநகர் தில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக தேசிய கொடியேற்றினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 



நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தில்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியையேற்றினார். குடியரசு தலைவரான பிறகு முதல் முறையாக அவர் தேசிய கொடியேற்றினார். முன்னதாக, டெல்லி ராஜபாதையில் தேசிய கொடி ஏற்ற வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார். பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படை தளபதிகளும் குடியரசுத் தலைவரை வரவேற்றனர்.



பின்னர், குடியரசு தலைவர் மறைந்த இந்திய விமானப்படை அதிகாரி ஜோதி பிரகாஷ் நிராலாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. டெல்லியில் இந்திய ராணுவத்தைப் பறைசாற்றும் வகையில் ஏவுகணை, பீரங்கிகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை வாகனங்களும் அணிவகுப்பில் பங்கேற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் அணிவகுப்பைக் கண்டு ரசித்தனர். 



குடியரசு தின விழாவில், மலேசியா, வியட்நாம், கம்போடியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 ஆசியான் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். விழாவில் பங்கேற்க வந்த 10 நாட்டு தலைவர்களையும், பிரதமர் மோடி வரவேற்றார்.



டெல்லி போலீஸ், மத்திய பாதுகாப்பு படைகள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 



தென்கிழக்கு ஆசியா கூட்டமைப்புடன் இந்தியா கொண்டுள்ள 25 ஆண்டு கால நட்புறவை குறிக்கும் விதமாக இந்த ஆண்டு ஆசியான் அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பாக தங்களின் பங்களிப்பை அளித்து வரும் 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...