கோவை மாவட்டத்தில் பிற மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூரப் பேருந்துகளின் கட்டண விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 25
கோவை மாவட்டத்தில் பிற மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூரப் பேருந்துகளின் கட்டண விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பேருந்துகளுக்கான கட்டண உயர்வு கடந்த 20-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, நகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3-ல் இருந்து ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 -ல் இருந்து ரூ. 20-ஆகவும் உயர்த்தப்பட்டது. அதேபோல, புறநகர் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 8-ல் இருந்து ரூ. 13-ஆக உயர்த்தப்பட்டது. இந்தக் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அடிப்படை ஊதியம் பெறுபவர்கள், போக்குவரத்துக்கென்றே பெரும் தொகையை ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், பேருந்துக் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அரசின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, தனியார் பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டண உயர்வு விவரம் தெரியாததால், நடத்துநர்கள் கேட்கும் தொகையை செலுத்த வேண்டிய நிலை பயணிகளுக்கு ஏற்பட்டது. அதிக கட்டணம் வசூலிப்பதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்று கொண்டே உள்ளன. இதனிடையே, பேருந்துக் கட்டண உயர்வுக்கு ஒருபுறம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அரசின் நிர்வாகத்தில் தலையிட முடியாது எனக் கூறிய சென்னை உயர்நீதிமன்றம், உயர்த்தப்பட்ட தொகையின் அளவையாவது பேருந்துகளில் ஒட்டுமாறு உத்தரவிட்டது.
இந்த நிலையில், கட்டண விபரங்களைப் பேருந்துகளில் ஒட்டுமாறும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்து கட்டண விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு...
கோவை - திருப்பூர் : டி.என்.எஸ்.டி.சி. கட்டணம் - ரூ. 37, எஸ்.டி.யூ. கட்டணம் -ரூ. 34, தனியார் கட்டணம் - ரூ. 32.
கோவை - ஈரோடு : டி.என்.எஸ்.டி.சி. கட்டணம் - ரூ. 80, எஸ்.டி.யூ. கட்டணம் -ரூ. 63, தனியார் கட்டணம் - ரூ. 60.
கோவை - சேலம் : டி.என்.எஸ்.டி.சி. கட்டணம் - ரூ. 145, எஸ்.டி.யூ. கட்டணம் -ரூ. 103, தனியார் கட்டணம் - ரூ. 99.
கோவை - சத்தியமங்கலம் : டி.என்.எஸ்.டி.சி. கட்டணம் - ரூ. 49, எஸ்.டி.யூ. கட்டணம் -ரூ. 42 , தனியார் கட்டணம் - ரூ. 40.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.