கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள பத்மாவத் திரைப்படம் முழுவதையும் திரையரங்கில் இருந்து நேரடியாக பேஸ்புக் மூலம் கசிய விடப்பட்ட சம்பவம் திரைப்படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜனவரி 25

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்திர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், `பத்மாவத்'. இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தங்கள் மாநிலங்களில் அந்தப் படத்தை வெளியிட முடியாது' என்று மத்தியப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசுகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தன.
இதனால், உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் உலகம் முழுவதும் இந்தத் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்தியாவில் சுமார் 4,500 திரையரங்குகளில் பத்மாவத் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 150 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பத்மாவத் முழு படமும் பேஸ்புக் பக்கம் மூலம் கசிந்துள்ளது. 'ஜாடன் கா அதா' என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ளது. 15,000-க்கும் அதிகமானோர் இந்த இணைப்பைப் பகிர்ந்துள்ளனர் மற்றும் பேஸ்புக்கில் 3.5 லட்சம் பேர் வீடியோ காட்சிகளை பார்த்து உள்ளனர். திரைப்படத்தை திரையிட்டு ஒரு தியேட்டரில் இருந்து நேரடியாக இது ஒளிபரப்பப்பட்டு உள்ளது.
பல்வேறு கட்டப் போராட்டங்கள், வழக்குகளைக் கடந்து திரையாகியுள்ள இந்தப் படத்தை, சில மர்ம நபர்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருப்பது திரைப்படக் குழுவினரை வேதனையடையச் செய்துள்ளது.