தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த விஜயேந்திர சரஸ்வதி, எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்- கொளத்தூர் மணி

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திர சரஸ்வதி மற்றும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் திருவள்ளுவர் சிலை முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 24

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திர சரஸ்வதி மற்றும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் திருவள்ளுவர் சிலை முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், சூலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்ற தமிழ் சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காத சம்பவம் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை செலுத்தும் தமிழக மக்கள் மனதைப் பாதித்துள்ளது.

விஜயேந்திர சரஸ்வதி மற்றும் அந்நிகழ்ச்சியை நடத்திய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகிய இருவரும் தமிழையும், தமிழர்களையும் அவமதித்ததற்காகத் திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.

பொது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திர சரஸ்வதி தியானம் செய்ததாக விளக்கம் அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...