பேருந்து கட்டணத்தை திரும்பப் பெறக்கோரி கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை, ஜனவரி 23

தமிழக அரசு சமீபத்தில் பேருந்து கட்டணங்களை 70 சதவிகிதம் உயர்த்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர்.
ஆடீஸ் வீதியில் உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து 4 மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்த அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர்.

அப்போது, இந்த கட்டண உயர்வு பொதுமக்களை கடுமையாக பாதித்து இருப்பதாகவும், தமிழக அரசு இந்தக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும், இந்த கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடத்த இருப்பதாகவும் யுவராஜா தெரிவித்தார்.