கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சதீஷ் (30), கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று அவர் தனது நண்பருடன் கணேசபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், சதீஷை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அவர் பணம் கொடுக்க மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.500-ஐ பறித்துள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றபோது, மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சதீஷ் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யுகேந்திரன் (22), போத்தனூர் மேட்டூரைச் சேர்ந்த முகமத் இஸ்மாயில் (28), மற்றும் போத்தனூர் பாரதி நகரைச் சேர்ந்த லிங்க பூபதி (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மூவர் மீதும் 308(4) மற்றும் 351(3) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...