அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

கோவையில் பேருந்திலிருந்து தவறி விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை, ஜனவரி 22

கோவையில் பேருந்திலிருந்து தவறி விழுந்த விபத்தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை பழினிகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் கீர்த்தனா (19). இவர் அவினாசி சாலையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் கூட்ட நெரிசலாக இருந்ததால் படியில் நின்று கொண்டிருந்தார். 

பேருந்து வடமதுரை-தடாகம் சாலையில் சென்ற போது நிலை தடுமாறிய கீர்த்தனா கீழே விழுந்தார். இதில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...