டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனுக்கு ஜவுளித்துறை அமைச்சர் விருது வழங்கினார்.
கோவை, ஜனவரி 20
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனுக்கு ஜவுளித்துறை அமைச்சர் விருது வழங்கினார்.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவாக ”கே.ஐ.ஜி.ஏ. 2018” (KIGA 2018) என்ற பெயரில் விருது வழங்கும் நிகழ்ச்சி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த ஆளுமைக்காக இந்த மாநாட்டில் விருது வழங்கப்படுகிறது. 3-வது முறையாக டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜவுளித்துறை அமைச்சர் அஜய் டம்டா, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மையத்தின் சிஇஓ ஸ்ரீஜன் பால்சிங், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் தயினேஷ்வர் எம். முலே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில், கோவில்பட்டியின் துணை மாவட்ட ஆட்சியரும், கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயனுக்கு ஜவுளித்துறை அமைச்சர் அஜய் டம்டா விருது வழங்கிக் கவுரவித்தார்.