தமிழகத்தில் பேருந்து கட்டணம் கடந்த 2001-ம் ஆண்டு முதல் இதுவரை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது. கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பேருந்து கட்டணத்தைத் தமிழக அரசு உயர்த்தியது. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று திடீரென்று அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது.
ஜனவரி 20

உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண விவரம் வருமாறு:-
இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பேருந்துகளில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 12 ஆகவும் இருந்தது. அந்தவகை பேருந்துகளில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 19 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக் கிறது.
இதேபோல, வால்வோ பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் (புறநகர்) பேருந்து கட்டணத்தை பொறுத்தமட்டில், சாதாரண பேருந்துகளில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் தற்போதுள்ள 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. 30 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கான விரைவு பேருந்து கட்டணம் 17 ரூபாயில் இருந்து 24 ரூபாய் ஆகவும், அதிசொகுசு, இடைநில்லா பேருந்துகள், புறவழிச்சாலை இயக்க பேருந்துகள் ஆகியவற்றுக் கான குறைந்தபட்ச கட்டணம் 18 ரூபாயில் இருந்து 27 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேதூரம் அதிநவீன சொகுசு பேருந்துசில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் 21 ரூபாயில் இருந்து 33 ரூபாய் ஆகவும்,
குளிர்சாதன பேருந்துக்கான கட்டணம் 27 ரூபாயில் இருந்து 42 ரூபாய் ஆகவும், வால்வோ பேருந்து கட்டணம் 33 ரூபாயில் இருந்து 51 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.மலைப் பகுதிகளில் சாதாரண பேருந்துகளில் 6 கி.மீ தூரம் பயணம் செய்ய இதுவரை ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இந்த அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும்.
இதேபோல் விரைவு பேருந்துகளில் 30 கி.மீ தூரத்துக்கு இதுவரை வசூலிக்கப்பட்ட 20 ரூபாய் அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும். இந்தக் கட்டண உயர்வு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது.
கட்டண உயர்வு குறித்து தமிழக அரசின் விளக்கம்:

தமிழகத்தில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் 22 ஆயிரத்து 509 பேருந்துகள் மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 615 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. மக்கள் நலனை கருதி மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், மலைப்பகுதிகள் போன்ற தொலைதூர இடங்களுக்கும் நாளொன்றுக்கு ஏறத்தாழ 88.64 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பேருந்துகள்இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினசரி 2.02 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்.
டீசல் மற்றும் மசகு எண்ணெயின் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதாலும், புதிய பேருந்துகளின்விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, பராமரிப்பு செலவுகள், பணியாளர் ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு, சட்டரீதியான பணப்பயன்கள் மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இக்கூடுதல் செலவுகளினால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்துகளை இயக்குவதற்குத் தேவையான வருவாய் ஈட்ட முடியவில்லை.
தொடர்ச்சியான வருவாய் இழப்பால் தொழிலாளர்களுக்காக செலுத்த வேண்டிய பணப்பயன்களை உரிய நேரத்தில் செலுத்த இயலாமல் தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், பேருந்துகளை சிறப்பாக பராமரித்து இயக்குவதிலும் இடர்பாடுகள் ஏற்படுகின்றன. இதுபோக்குவரத்து தொழிலாளர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தையும், மனரீதியான சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்காக அரசு மானியம் வழங்கி வரும் நிலையிலும் கூட, வருவாய்க்கும், இயக்க செலவிற்கும் உள்ள இடைவெளி இழப்பு நாளொன்றுக்கு ரூ.9 கோடி என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது இயங்கும் அரசுப் பேருந்துகளில்75 சதவீத பேருந்துகள் 6 வருடங்களுக்கு மேற்பட்டவையாக இருப்பதால் அந்த பேருந்துகளின் இயக்கத்திறனும் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.
பணியாளர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு, ஓய்வூதியங்கள், எரிபொருட்களின் விலை உயர்வு, இயக்கத்திறனை அதிகரிக்கும் வகையில் புதிய பேருந்துகளை வாங்குதல், பேருந்துகள் பராமரிப்புக்கான செலவு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 18.11.2011 அன்று ரூ.43.10-க்கு விற்ற ஒரு லிட்டர் டீசல், இன்று ரூ.65.83 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 50 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பேருந்து கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 6 வருடங்களாக பேருந்துகட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. ஆனால், அண்டை மாநிலங்கள் பேருந்துகட்டணத்தை எரிபொருள் விலை உயர்வு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக பல முறை உயர்த்தியுள்ளன. கடந்த 2000-ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை கர்நாடகா 16 முறையும், ஆந்திரா மற்றும் கேரளா தலா 8 முறையும் பேருந்துகட்டணத்தை மாற்றியமைத்துள்ளன. தமிழகத்தில் உள்ள அடிப்படை பேருந்து கட்டணம், பிற அண்டை மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் குறைவானது.
கடந்த 7 வருடங்களில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ரூ.12,059.17 கோடியை மானியமாக அரசு வழங்கியுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள தொடர் நஷ்டம் ரூ.20,488 கோடியாக உள்ளது. அரசு, பேருந்துகட்டண உயர்வை இதுவரை தவிர்த்தபோதும், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக இயங்கிடவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்கிடவும், தற்போது பேருந்துகட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் பிற அண்டை மாநிலங்களின் பேருந்து கட்டணத்தைவிட பெரும்பாலும் குறைவாகவே உள்ளது. இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.