கோவை சங்கனூர் ஓடையில் டயர் மற்றும் கழிவுப்பொருட்கள் எரிந்ததை, அணைத்த தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
கோவை, ஜனவரி 19
கோவை சங்கனூர் ஓடையில் டயர் மற்றும் கழிவுப்பொருட்கள் எரிந்ததை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
சிவானந்தகாலனி பகுதியிலிருந்து சங்கனூர் செல்லும் வழியிலுள்ள ஓடையில் , டயர் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று(19.01.2018) மாலை கழிவுகளில் தீ பிடித்து எரிந்துள்ளது. அதில் இருந்து வந்த நச்சுப்புகை அப்பகுதி முழுவதும் பரவியதை அடுத்து , மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
இந்த பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்ட போதும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஓடை மறிக்கப்பட்டு கழிவு நீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.