ஒரு பள்ளிக்கு இரண்டே ஆசிரியர்கள் : மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கும் மாநகராட்சி நிர்வாகம்

கோவையில் 98 மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளி ஒன்றில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை, ஜனவரி 19

கோவையில் 98 மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளி ஒன்றில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை கரும்புக்கடையை அடுத்த சாரமேடு பகுதியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 98 மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கும் வாயிலாக இப்பள்ளி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் என மொத்தமாகவே இரண்டு பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.



இது குறித்து மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரான மோகனா என்பவர் கூறுகையில், "98 மாணவர்கள் பயிலும் பள்ளியில் மாநகராட்சி பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். தலைமையாசிரியர் பணி நிமித்தம் காரணமாக வெளியே சென்றுவிட்டால் ஒரேஒரு ஆசிரியர் மொத்த பள்ளியையும் நிர்வகிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பள்ளியில் பிரத்தியேகமான சமையல் அறை இல்லை. இதனால், படிக்கட்டுகளின் கீழ் தான் சத்துணவு தயாரிக்கப்படுகிறது.

சிலை வைப்பதற்கும், விழா கொண்டாடுவதற்கும் ஆளும் அரசு பணத்தை செலவிட்டு வருகிறது. ஆனால், மாணவ, மாணவிகளின் வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் கல்விக்கு எந்த நலனையும் செய்ய தவறிவிட்டது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி உடனடியாக ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...