விமானம் போல் செல்லும் ஆம்னி பேருந்துகளால் மக்கள் அவதி

கோவை அவினாசி சாலையில் அதிகாலை நேரங்களில் விமானம் போல அதிவேகமாகச் செல்லும் ஆம்னி பேருந்துகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை, ஜனவரி 19

கோவை அவினாசி சாலையில் அதிகாலை நேரங்களில் விமானம் போல அதிவேகமாகச் செல்லும் ஆம்னி பேருந்துகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலிருந்து சென்னை, திருச்சி, தூத்துக்குடி, நாகபட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் மாவட்டங்களுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பட்டதாரி இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கோவையில் இருந்து தொழில் தொடர்பாகவும், வேலை நிமித்தமாகவும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று வரவும் இந்த ஆம்னி பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

கோவை கணபதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் செல்ல அவினாசி சாலை வழியாக இந்த பேருந்துகள் அதிக அளவில் செல்கின்றன. அதிகாலை நேரங்களில் போக்குவரத்து குறைவாக இருப்பதால் அவினாசி சாலையில் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ள இந்த சாலை ஓரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் விமானம் போல வேகமாக இச்சாலையில் செல்வதாக புகார் கூறும் மக்கள் சில சமயங்களில் சாலையைக் கடக்கவே உயிர் பயம் வருகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து பொதுமக்களில் ஒருவர் கூறுகையில்:- "அதிகாலை நான்கு முதல் ஆறு மணி வரை இச்சாலையில் வாகனங்கள் குறைவாக தான் இயங்கும். இதனால் கோவை மாநகரத்திலுள்ள பெரும்பாலான மக்கள் இச்சாலை ஓரத்தை நடைபயிற்சிக்கு பயன்படுத்துகிறார்கள். அதிக சத்தத்துடன், கண் கூசும் வகையில் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தியவாறு ஆம்னி பேருந்துகள் மிகவும் வேகமாகச் செல்கிறது. இதனால் மக்கள் அச்சத்துடனேயே சாலையோரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. காவல்துறையினர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறுகையில்:- "ஆம்னி பேருந்துகளின் வேகத்தை கண்காணித்து அதனை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த இருநாட்களாக மேற்கொண்ட சோதனையில் 20-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும்" என்றார்.

அதேபோல் முகப்பு விளக்குகளில் அதிக வெளிச்சம் வராமல் இருக்க ஸ்டிக்கர் ஒட்டும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...