கோவையில் 1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை, ஜனவரி 18
கோவையில் 1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சலீவன் வீதியை சேர்ந்தவர் ரவி (54). இவரிடம் மைசூரைச் சேர்ந்த இருவர் தங்களுக்கு தங்கப் புதையல் கிடைத்திருப்பதாகவும், ரூ.30 லட்சம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறினர்.
இதை தொடர்ந்து, ரவி அவர்களிடம் நகையை காண்பிக்குமாறு கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து,
நேற்று காலை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் அருகே வந்த அவர்கள் ரவியிடம் 1.5 கிலோ எடையுள்ள நகைகளை காண்பித்தனர்.
அப்போது அவை தங்கமுலாம் பூசப்பட்ட கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும், மைசூர் பகுதியை சேர்ந்த சத்ருஹான் (30), கவுரி (45) என்பதும், 1.5 கிலோ எடையுள்ள போலி தங்க நகைகளை விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.