"என்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்": கோவையில் பாரத் சேனாவைச் சேர்ந்த பெண் பிரமுகர் பரபரப்பு புகார்

வாலிபர்கள் சிலர் தன்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக நடந்து கொள்வதாக கூறி பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த பெண் பிரமுகர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

கோவை, ஜனவரி 17

வாலிபர்கள் சிலர் தன்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக நடந்து கொள்வதாக கூறி பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த பெண் பிரமுகர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.



கோவை சங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. அதே பகுதியில் மணிகண்டன் டிரேடர்ஸ் என்ற பெயரில் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த வாரம் 'இந்து அமைப்பில் இருந்து கொண்டு அராஜகம் செய்த பெண்மணி' என்ற பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், சரஸ்வதி சில வாலிபர்களுடன் சண்டையிடுவதைப் போன்ற காட்சிகள் இருந்தது.

இந்த நிலையில், தன்னைப்பற்றி தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சரஸ்வதி இன்று காலை கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் கடந்த 20 ஆண்டுகளாக இரும்பு வியாபாரம் செய்து வருகிறேன். அந்த பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் சிலர் எண்ணிடம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு வாடகைக்கு சென்று வந்தார்கள். காலப்போக்கில் அவர்களது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், நானே சொந்தமாக ஆட்டோ வாங்கினேன். இதனால், கோபம் கொண்ட அவர்கள் என்னை பழி வாங்க நினைத்தனர்.

தினமும் மது அருந்திவிட்டு எனது கடை முன் பாட்டில்களை அடுக்கிவிட்டு செல்கின்றனர். இதை தட்டிக்கேட்ட என்னையும், எனது கணவரையும் தாக்கினர்.

இந்த சம்பவத்தின் போது, நான் கோபம் கொண்டு அவர்களிடம் சண்டையிட்டதை மட்டும் வீடியோவாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன். தொடந்து இதேபோல் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...