தினகரனும், கமலும் தனிக்கட்சி ஆரம்பித்தால் அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை: முதலமைச்சர்

தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 17

தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அப்போது, அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க என்று கோஷமிட்டனர். பின்னர் இருவரும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர். அதனைத்தொடர்ந்து விபத்தால் பாதிக்கப்பட்ட 2 தொண்டர்கள் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் நிதியுதவி வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-  பிரதமர் நேரம் ஒதுக்கிய பின்பு சென்னையில் பிரம்மாண்டமான எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். தினகரன், கமல் உள்ளிட்ட யார் தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அ.தி.மு.க.வுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஹஜ் மானியம் ரத்து தொடர்பாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்படும். என்றார். 

”காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்தால் வலியுறுத்துவேன்” என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...