விண்ணைத் தொடும் அளவிற்கு டீசல் விலை கிடுவிடு உயர்வு

டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.65.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜனவரி 16




டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.65.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை அதிகரித்து வரும் நிலையில், டீசல், பெட்ரோல் விலை இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ளன. டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு லிட்டர் 61.88 (டெல்லி) ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது, ரூ.71.27 -க்கு ஒரு லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் 2014-க்கு பிறகு, பெட்ரோல் விலை முதல்முறையாக இந்த விலையை எட்டியுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் இன்று பெட்ரோல் விலை 9 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை லிட்டருக்கு 14 முதல் 16 காசுகள் வரை அதிகரித்துள்ளது. தற்போது பெட்ரோல், சென்னையில் ஒரு லிட்டர் ரூ. 73.89 காசுகளாகவும், கொல்கத்தாவில் ரூ.74-ஆகவும், மும்பையில் ரூ. 79.15-க்கும் விற்கப்படுகின்றன. டீசல் விலை கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ. 64.54 ஆகவும், மும்பையில் ரூ.65.9 ஆகவும், சென்னையில் ரூ. 65.23 -க்கும் விற்கப்படுகின்றன. 

இந்த கிடுகிடு விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் தினமும் மாற்றியமைத்து வருகிறது.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...