அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டியுள்ளார்.


கோவை: பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மூலம் 237 அம்மா உணவகங்களும் என மொத்தம் 620 அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

ஏழை எளிய மக்களின் பசியை ஆற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை பொதுமக்களுக்கு வழங்க தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், சமீப காலங்களில் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்பது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உரிய அரசுத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், அம்மா உணவகங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், சுவையுடன் கூடிய தரமான உணவுகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.

மேலும், இந்த மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான செலவுகளை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஏழை எளியோரின் பசியைப் போக்க, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கரங்களால் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்ட 620 அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைத்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...