அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் : சீறிப்பாயும் காளைகள்

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டையொட்டி 1000-த்திற்கும் மேற்பட்ட காளைகள் அலங்காநல்லூர் வந்துள்ளன. முன்னதாக, 1,241 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. இதற்காக 10 மருத்துவ குழுக்கள் உடல் பரிசோதனை செய்துள்ளனர். அதேபோன்று காளைகளை 12 கால்நடை மருத்துவ குழுக்களும் பரிசோதித்தனர். 

இதைத்தொடந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அலங்காநல்லூர் வருகை தந்து ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலாவதாக வந்த முனியாண்டி கோயில் காளைக்கு சிவப்பு கம்பள பரிசு வழங்கப்பட்டது. அதன்பின் போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையருக்கு முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. இதேபோல, சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ரசித்து பார்த்தனர். 

பின்னர், நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஜல்லிக்கட்டை தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பார்த்து வருகின்றனர். இது தமிழகத்திற்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த பெருமை. வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக நாம் கருதுகிறோம். காளைகளை துன்புறுத்திடாமல் தங்களது குழந்தைகளை போல் உரிமையாளர்கள் வளர்த்து வருகின்றனர். என்றார். 

”ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும்” எனத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். முன்னதாக விழா மேடையில் அவர் பேசுகையில், பல தடைகளை உடைத்து சட்டப் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு நடந்துவருகிறது. ஜல்லிக்கட்டு இருக்கும் வரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும், என்றார்.

இதனிடையே, அலங்காநல்லூரில் காளையர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அறிவித்தனர். உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...