களைகட்டிய பொங்கல் விற்பனை : கரும்பு விலை சரிவு, ஆர்வமுடன் வாங்கும் பொதுமக்கள்

கோவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும், கரும்பு விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

கோவை, ஜனவரி 13

கோவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும், கரும்பு விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கரும்புகள் கோவையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கப் பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு மக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

பண்டிகையின் முக்கிய அம்சமான கரும்பு, ஒரு ஜோடி ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஒரு ஜோடி கரும்பு ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு விலை குறைந்து இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆர்வத்துடன் கரும்பை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். 

இதனிடையே, கரும்பு விற்பனை இந்தாண்டு விவசாயிகளுக்கும், ஆறுதல் அளிப்பதாகவும், விலை குறைவு காரணமாக விற்பனை அமோகமாக இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...