ஆண்டாள் சர்ச்சை கருத்து விவகாரம் : வைரமுத்துக்கு எதிராக வைணவர்கள் போராட்டம்

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துக்கு எதிராக கோவையில் வைணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை, ஜனவரி 13

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துக்கு எதிராக கோவையில் வைணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



பெரியகடை வீதியில உள்ள வேணுகோபால் சாமி கோவில் முன்பாக  ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக   கூறி இன்று காலை  வைணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனி மடத்தின் 24 வது பட்ட  சடகோப ராமனுஜ ஜீயர் கலந்து கொண்டார். கோவில் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில கண்டன ஆர்ப்பாட்டத்தில்  50-க்கும் மேற்பட்டோர் வைணவர்களும், ஆண்டாள் பக்தர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின்  போது பேட்டியளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், கவிஞர் வைரமுத்து வரும் செவ்வாய் கிழமைக்குள் மன்னிப்பு கேட்கவில்லை எனில் புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக  தெரிவித்தார். மேலும் செவ்வாய்கிழமைக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு வந்து கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், உலகம் முழுவதும் உள்ள இந்துகள் சேர்ந்து குரல் கொடுத்து கவிஞர் வைரமுத்துவை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரவைப்போம் எனவும் ஜீயர் தெரிவித்தார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநில செயலாளர் வானதி சீனிவாசன்  உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பங்கேற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...