பொங்கல் பண்டிகைக்கு கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கக் கோரி பெற்றோர்கள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள பொங்கல் பண்டிகையின் போது மாநில கல்வி வாரியம் அளிக்கும் விடுமுறைகளைப் போலவே கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை, ஜனவரி 12

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள பொங்கல் பண்டிகையின் போது மாநில கல்வி வாரியம் அளிக்கும் விடுமுறைகளைப் போலவே கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் சார்பில் 46 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் கேந்திரிய பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழுந்தைகளுக்கு இந்த பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு சேர்க்கப்படுகின்றனர். 

கோவையில், சவுரிபாளையம் மற்றும் சூலூர் ஆகிய இரண்டு இடங்களில் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளானது செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 45 கேந்தரிய பள்ளிகளுக்கு ஜனவரி 15-ம் தேதி மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

மாநில கல்வி வாரியம் அறிவித்துள்ளதைப் போல பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை மத்திய கல்வி வாரியத்திற்கு உட்பட்ட தமிழக பள்ளிகளுக்கும் அளிக்க வேண்டும் என கேந்தரிய வித்யாலயா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்துகொள்ள குழந்தைகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தமிழகத்திற்கு சம்மந்தமில்லாத குருகோவிந்சிங் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி, ஜென்மாஸ்டமி, குரு நானக் பிறந்த நாள், கோவர்தன் பூஜா, புத்த பூர்ணிமா போன்ற தமிழகத்திற்கு சம்பந்தமில்லாத நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவதைத் தவிர்த்து பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் தசரா பண்டிகை, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதைப் போல பொங்கல் விழாவையும் கொண்டாட வேண்டும் எனவும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...